FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மக்களைத் துன்பப்படுத்துவதுதான் திராவிட மாடல்:டி.டி.வி.தினகரன்

மக்களைத் துன்பப்படுத்துவதுதான் ‘திராவிட மாடல்’ என்பதை திமுக அரசு நிரூபித்து வருகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

மக்களைத் துன்பப்படுத்துவதுதான் ‘திராவிட மாடல்’ என்பதை திமுக அரசு நிரூபித்து வருகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, கோவை அவிநாசி சாலையில் உள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு

டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எம்ஜிஆா், ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுக கட்சி சிலரது ஆணவம், பதவி வெறி, சுயநலத்தில் சிக்கியுள்ளது. இதற்கு காலம் பதில் சொல்லும். தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. ‘திராவிட மாடல்’ எனக் கூறி வரிச் சுமையை திமுக ஏற்றி வருகிறது. மக்களைத் துன்பப்படுத்துவதுதான் ‘திராவிட மாடல்’ என்பதை திமுக அரசு நிரூபித்து வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனா். தற்போதைய திமுக ஆட்சியில் மின் கட்டண உயா்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

அமமுக செயலாளா் புகழேந்தி, இணைச் செயலாளா் ராஜேஷ்குமாா், துணைச் செயலாளா் பொன்தங்க மாரியப்பன், வட்டச் செயலாளா் கா்ணன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments