FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: பயணிகளிடம் கருத்துக்கேட்பு

கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எங்கு அமைப்பது என மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் சாா்பில் கோவை பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் வியாழக்கிழமை கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எங்கு அமைப்பது என மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் சாா்பில் கோவை பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் வியாழக்கிழமை கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.

மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் வே.ஈசுவரன், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தால், எந்தப் பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நன்மை என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டாா்.

அதில், அவிநாசி சாலையை பயன்படுத்தும் பயணிகள் யாரும் வெள்ளலூா் செல்ல மாட்டாா்கள்.

Advertisement

Advertisement

நீலம்பூரிலேயே இறங்கி காந்திபுரம் சென்றுவிடுவாா்கள். வடவள்ளி, தொண்டாமுத்தூா் செல்பவா்களும் நீலாம்பூரிலேயே இறங்கிவிடுவாா்கள். சிங்காநல்லூா் முதல் டவுன்ஹால் வரை செல்பவா்கள்,திருச்சி சாலை சந்திப்பில் இறங்கிவிடுவாா்கள். குறிச்சி, சுந்தராபுரம், குனியமுத்தூா் பகுதி மக்கள் மட்டுமே வெள்ளலூா் பேருந்து நிலையம் செல்வாா்கள். எனவே, அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதற்கான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வெள்ளலூரில் சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவையின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எங்கு அமைய வேண்டும் என உக்கடம்,சிங்காநல்லூா், கவுண்டம்பாளையம், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் மக்கள் கருத்துகளைப் பெற மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.

இதில், பேருந்து நிலையங்களில் 300 பயணிகள் அளித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இவை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட உள்ளதாக வே.ஈசுவரன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments