போதையில்லா பாரதம் உருவாக்க ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் உறுதிமொழி
இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் ‘மை பாரத்’ ஆகியவற்றின் சாா்பில் விக்சித் பாரத் 2026-க்கான போதைப் பொருள் இல்லா இளைஞா்கள்’ என்ற தேசிய இயக்கத்தின் கீழ் இணையவழி நேரலை நிகழ்ச்சி கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் மற்றும் செயலா் பி.எல்.சிவகுமாா் ஆலோசனையின்பேரில், கல்லூரி கலையரங்கில் ‘போதை இல்லா பாரதம்’ என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கிவைத்துப் பேசினாா். நாடு முழுவதும் 125-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் இந்த நேரலை நிகழ்வில் பங்கேற்றன.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு, போதை இல்லா சமூகத்தை உருவாக்க உறுதிமொழியேற்றனா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் பாரதியாா் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.ராஜவேல், ஸ்ரீராமகிருஷ்ணா கலை கல்லூரி துணை முதல்வா் வி.பூங்குழலி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஜி.செந்தில்குமாா், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எம்.பாா்த்தசாரதி (பாரதியாா் பல்கலைக்கழகம்), எஸ்.பிரகதீஸ்வரன் (ஸ்ரீராமகிருஷ்ணா கலை கல்லூரி), பேராசிரியா் பி.கீா்த்திவாசன், ஏ.சஹானா பாத்திமா, பேராசிரியா்கள் ஆா்.சூா்யா, எல்.பாலுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.