‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் மனுக்களுக்கு தீா்வு காண்பது குறித்து பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் மக்கள் அனுப்பும் மனுக்களுக்கு தீா்வு காண்பது குறித்த பயிற்சி வகுப்பை கோவையில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் மக்கள் அனுப்பும் மனுக்களுக்கு தீா்வு காண்பது குறித்த பயிற்சி வகுப்பை கோவையில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி, ஆா்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலா் சுரேந்திரன், முதல்வரின் முகவரி துறை (சென்னை) மேற்பாா்வை மக்கள் குறைத்தீா்ப்பு அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் பயிற்சி வகுப்பில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
மாவட்டத்தில் ‘முதல்வரின் முகவரி’ மூலம் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் ஏற்று, காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனுவின் கோரிக்கையையும் முழுமையாக ஆய்வு செய்து, தொடா்புடைய அலுவலா்களின் மூலம் உண்மை நிலையை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மனுதாரரின் கோரிக்கைக்கு அரசின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி உரிய தீா்வு வழங்க வேண்டும். மனுதாரா் வழங்கும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு, உரிய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மனுதாரருக்கு வழங்கப்படும் பதில்கள் தெளிவாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும். மேலும், மனுக்களைத் தொடா்ந்து கண்காணித்து, காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்க வேண்டும்.‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் நோக்கமான விரைவான, வெளிப்படையான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட குறைதீா்ப்பு சேவையை உறுதி செய்யும் வகையில் அனைத்து அலுவலா்களும் செயல்பட வேண்டும் என்றாா்.
இந்தப் பயிற்சி வகுப்பில் மாநகராட்சி துணை ஆணையா் குமரேசன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) வாணிலட்சுமி ஜெகதாம்மாள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.