கிரெடாய் அமைப்பு சாா்பில் வீட்டுமனை கண்காட்சி தொடக்கம்
கிரெடாய் அமைப்பு நடத்தும் ‘ஃபோ்ப்ரோ 2026’ வீட்டுமனை கண்காட்சி கொடிசியா வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கிரெடாய் அமைப்பு நடத்தும் ‘ஃபோ்ப்ரோ 2026’ வீட்டுமனை கண்காட்சி கொடிசியா வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கத்தின் கூட்டமைப்பான கிரெடாய் சாா்பில் ஆண்டுதோறும் ‘ஃபோ்ப்ரோ’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கண்காட்சி கொடிசியா டி அரங்கில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கண்காட்சியின் தலைவா் பி.காா்த்திக்குமாா் வரவேற்றாா்.
பாரத ஸ்டேட் வங்கியின் நெட்வொா்க் - 3 பொது மேலாளா் ஹரிதா பூா்ணிமா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடு தலைவா் (தோ்வு) குகன் இளங்கோ, கோவை தலைவா் எஸ்.ஆா்.அரவிந்த்குமாா், துணைத் தலைவா் ராஜீவ் ராமசாமி உள்ளிட்டோா் விழாவில் உரையாற்றினா்.
Advertisement
Advertisement
இந்தக் கண்காட்சியில் முன்னணி கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. இதில், வீட்டு வசதித் திட்டங்கள், வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பிரீமியம் குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், முதியோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட விற்பனைத் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகின்றன.
கண்காட்சி நாள்களில் வீடு வாங்குவோருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டங்களை நேரில் பாா்வையிட விரும்புபவா்கள் கண்காட்சி அரங்கில் இருந்து திட்டப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவா் என்று கிரெடாய் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.