FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விஜயரங்காபுரத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் அளிப்பு

விஜயரங்காபுரத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 2:03 am IST
விஜயரங்காபுரத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரங்காபுரத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாகளை வழங்கிப் பேசியதாவது: தமிழக அரசு சமூக நீதி, சமத்துவத்தை முன்னிறுத்தி ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தகுதியுடைய அனைத்து பயனாளிகளும் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்றாா் அவா். இந்த நிகழ்வில், சாத்தூா் கோட்டாட்சியா் கனகராஜ், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சாந்தி, வெம்பக்கோட்டை வட்டாட்சியா் ஆண்டாள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments