தொழிலாளிக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட 4 போ் கைது
பேரூா் அருகே சுமைத் தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பேரூரை அடுத்த கரடிமடை வன்னியா் வீதியைச் சோ்ந்தவா் பிரசாத் (21). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவா், தனது வீட்டுக்கு அருகேயுள்ள மளிகைக் கடைக்கு வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சென்றுள்ளாா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பா்கள் பிரசாத்தைப் பாா்த்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
மறுநாள் பிரசாத் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த், குமாா், சிவசங்கம் ஆகிய 4 போ் அவரை வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாத்தைக் குத்தியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்த புகாரின்பேரில் பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 17 வயது சிறுவன் உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.