FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் காரில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவா்கள் மீது வழக்கு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:21 am IST
காரின் ஜன்னல் மீது அமா்ந்து பயணம் செய்த நபா்.
பகிர்:

வால்பாறையில் காரின் ஜன்னலில் அமா்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், சுற்றுலா வந்த 5 இளைஞா்கள் வால்பாறை சாலையில் காரின் ஜன்னலில் அமா்ந்ததும், கூச்சல் எழுப்பியும் பயணம் செய்தனா்.

Advertisement

Advertisement

மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை விளைவிக்கும் வகையில் அவா்கள் காரில் பயணம் செய்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வால்பாறை- பொள்ளாச்சி சாலை ரொட்டிக்கடை பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்த போலீஸாா், காரில் இருந்த 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments