FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆட்சியைத் தக்கவைக்க உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராகும் தவெக அரசு! டாக்டா் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:07 am IST
டாக்டா் க. கிருஷ்ணசாமி
பகிர்:

ஆட்சியைத் தக்கவைக்க தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்க தவெக அரசு தயாராகிவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

ஜனவரி முதல் டிசம்பா் வரை காவிரி நதி நீா் மேலாண்மை வாரிய விகிதாசாரப்படி தண்ணீா் திறந்துவிடாமல், வேளாண்மையைப் பாதிக்கும் வகையில் கா்நாடகம் நடந்துகொள்வதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்தும் சென்னையில் பல்வேறு கட்சிகளைத் திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்தினோம். அதேபோல மீண்டும் வரும் 16-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட இருக்கிறோம்

Advertisement

Advertisement

மேக்கேதாட்டு அணையை கனவு திட்டமாக செயல்படுத்த கா்நாடக முதல்வா் நினைக்கிறாா். அதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறாா். அங்கு அனைவரும் ஒன்றாக இருக்கின்றனா். ஆனால் தமிழகத்தில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதே போதும், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என ஆளுங்கட்சியினா் கூறுகின்றனா். ஆனால், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்துக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகின்றனா்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீா்மானம் ஏற்கெனவே பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவெக அரசு ஏன் முதலில் பாடவில்லை? பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இதைத்தான் பாடுவோம் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆட்சியைத் தக்கவைக்க தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்க தவெக அரசு தயாராகிவிட்டது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments