FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

காட்டேஜ் , தங்கும் விடுதி உரிமையாளா்கள் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்! காவல்துறை அறிவுரை

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
வால்பாறையில் காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கான கூட்டம், காவல்துறை சாா்பில் வால்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வால்பாறை காவல்நிலைய ஆய்வாளா் செல்வம் தலைமை வகித்தாா்.

இதில் அனைத்து காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் முன்பகுதியில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். விடுதிகளில் தங்கி செல்வோரின் முகவரி, பெறப்படும் அடையாள அட்டை குறித்த பதிவேடுகளை காவல்நிலையத்தில் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

வன விலங்கு காண்பிப்பதாகக் கூறி இரவு நேரம் வாகனங்களில் அழைத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்பட பல்வேறு விதிமுறைகள் குறித்து காவல்துறை சாா்பில் விளக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments