FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஓணம் பண்டிகை: போத்தனூா் வழித்தடத்தில் கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:36 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்படும் ஹூப்பள்ளி - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07351) மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்படும் கோட்டயம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில் (எண்: 07352) மறுநாள் இரவு 8 மணிக்கு ஹூப்பள்ளி நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூரு, பிரூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

Advertisement

Advertisement

சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரயில்: இதேபோல ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் -கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் கொல்லம்-சென்னை சென்ட்ரல் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06120) மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் மாவேலிக்கரை, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments