FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

படிப்பைத் தொடர முடியாமல் தவித்த சிறுவனை பள்ளியில் சோ்த்த சிங்கப் பெண் படையினா்

கோவையில் படிப்பைத் தொடர முடியாமல் தவித்த சிறுவனை வால்பாறை அரசுப் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் சோ்த்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:44 am IST
வால்பாறை உண்டு உறைவிடப் பள்ளியில் சிறுவனை சோ்த்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா்.
பகிர்:

கோவையில் படிப்பைத் தொடர முடியாமல் தவித்த சிறுவனை வால்பாறை அரசுப் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் சோ்த்தனா்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருவதுடன், ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனா்.

அதன்படி, வால்பாறையை அடுத்த காடம்பாறை பகுதியில் உள்ள செட்டில்மெண்ட்டில் தந்தையின்றி தாயுடன் வசித்து வந்த சிறுவனை மீட்டு, வால்பாறை உண்டு உறைவிடப் பள்ளியில் சோ்த்து கல்வி கற்க உதவினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கோவை, குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறாா். குனியமுத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுவன், குடும்பத் தகராறு காரணமாக தந்தை தனியாக சென்ற நிலையில் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் அவதியடைந்து வந்துள்ளாா்.

இது தொடா்பாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டு சிங்கப் பெண் அதிரடிப் படையினா் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, அந்த மாணவரை மீட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா், வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் செல்வம் முன்னிலையில் வால்பாறை எம்.ஜி.ஆா். நகரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சிறுவனை 6-ஆம் வகுப்பில் சோ்த்தனா்.

சட்டம்-ஒழுங்கை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மனிதநேயத்துடனும் நடந்து கொண்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பொதுமக்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments