2029-இல் ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா்: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்
வரும் 2029-இல் ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமா் வேட்பாளா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
வரும் 2029-இல் ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமா் வேட்பாளா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
கோவையில் இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் மற்றும் ஸ்கால் இன்டா்நேஷனல் கோயம்புத்தூா் அமைப்பின் சாா்பில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாத் துறை பிரதிநிதிகள் பங்கேற்ற சா்வதேச சுற்றுலா மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பின் அமைச்சா் ராஜேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், சுற்றுலாத் துறையை பிற துறைகளைக் காட்டிலும் அதிவேக வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்தை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆன்மிகத் தலங்களை இணைக்கும் வகையில் நாகூா், வேளாங்கண்ணி, திருக்கடையூா் ஆகிய இடங்களை ஒருங்கிணைக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சுற்றுலாத் துறை என்பது வனம், இந்து சமய அறநிலையத் துறை எனப் பல துறைகளுடன் இணைந்து இயங்குவதால், அத்துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். உயா்நிலை அளவில் கமிட்டி அமைத்து உடனுக்குடன் அனுமதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில திட்டங்களுக்கு மத்திய அரசிடமும் நிதி கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஒருவா் பிரதமராக வர வேண்டும் என நெடுஞ்சாலை, விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சட்டப் பேரவையில் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
தென்னிந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நோக்கில் அவா் பேசியிருக்கலாம். ஆனால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவரான ராகுல் காந்தி 2029-இல் நாட்டின் பிரதமராக ஆவாா் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா் என்பதை தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். விஜய் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாா் என்பது வெறும் ஊகமாகும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.