FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 4:26 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் மகன் ஜீஜோ (30). இவா் கோவையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். கோவை-அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையில், பின்னால் வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து இவரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ஜீஜோ உயிரிழந்தாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான காா் ஓட்டுநரான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த சரவணன் (34) என்பவரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments