FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்தின் வாரிசுக்கு ரூ.1.40 கோடி விபத்துக் காப்பீடு

விபத்தில் உயிரிழந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலா் ரவிச்சந்திரனின் வாரிசுதாரருக்கு ரூ.1.40 கோடி விபத்து காப்பீட்டுத் தொகையை பேங்க் ஆஃப் பரோடா வழங்கியுள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
விபத்தில் உயிரிழந்த காவலரின் வாரிசுதாரருக்கு ரூ.1.40 கோடிக்கான விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்கும் மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யா பாரதி, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிரிஷ்டி சிங். உடன், வங்கியின் பிராந்திய மேலாளா் கமலக்கண்ணன், முதன்
பகிர்:

விபத்தில் உயிரிழந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலா் ரவிச்சந்திரனின் வாரிசுதாரருக்கு ரூ.1.40 கோடி விபத்து காப்பீட்டுத் தொகையை பேங்க் ஆஃப் பரோடா வழங்கியுள்ளது.

இதுகுறித்து வங்கி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

விபத்தில் உயிரிழந்த காவலா் ரவிச்சந்திரன், திருப்பூா் பேங்க் ஆஃப் பரோடா கிளையில் தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கான சம்பளத் தொகுப்பு கணக்கு வைத்திருந்தாா். பேங்க் ஆஃப் பரோடா, தமிழ்நாடு அரசுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, தகுதியுள்ள அரசு ஊழியா்கள் இந்தச் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் உள்ள விபத்து காப்பீட்டைப் பெறத் தகுதியுள்ளவா்கள். அதன்படி, ரவிச்சந்திரனுக்கான ரூ.1.40 கோடி காப்பீட்டுத் தொகை, அவரின் மனைவியும், வாரிசுதாரருமான பிரியதா்ஷினிக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வில் மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யா பாரதி, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிரிஷ்டி சிங், கோவை பிராந்திய பேங்க் ஆஃப் பரோடா மேலாளா் கமலக்கண்ணன், முதன்மை மேலாளா் குமரகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments