FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பேங்க் ஆஃப் பரோடா லாபம் 48 சதவீதம் சரிவு!

பேங்க் ஆஃப் பரோடாவின் நிகர லாபம், ஜூன் வரையான காலாண்டில் 48% சரிந்து ரூ. 1,783 கோடியாக சரிந்தது.

Updated On : 24 ஜூலை 2026, 10:11 pm IST
பேங்க் ஆஃப் பரோடா - கோப்புப் படம்.
பகிர்:

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட என்.எம்.சி. குழும விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட தீர்வுக்காக ரூ. 5,680 கோடி செலுத்தப்பட்டதன் தாக்கத்தால், பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் 48 சதவீதம் சரிந்து ரூ. 1,783 கோடியாகக் குறைந்துள்ளதாக வங்கி இன்று அறிவித்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடாத நிலையில், அபுதாபி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பது வணிக ரீதியாக ஒரு விவேகமான முடிவு என்று வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான தேபதத்தா சந்த் தெரிவித்துள்ளார்.

என்எம்சி ஹெல்த் பிஎல்சி, என்எம்சி ஹெல்த்கேர் லிமிடெட் மற்றும் என்எம்சி ஹோல்டிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு எட்டப்பட்டதாகவும், இதற்காக தனது அபுதாபி கிளை மூலம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 5,700 கோடி) செலுத்தப்பட்டதாகவும் பேங்க் ஆஃப் பரோடா ஜூலை 2ஆம் தேதியன்று தெரிவித்தது.

Advertisement

Advertisement

கோரப்பட்ட மொத்தத் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகக் குறைவு என்று கூறிய சந்த், இது தொடர்பான விவரங்களை ரகசியமாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய மும்பை பங்குச் சந்தையில் பேங்க் ஆஃப் பரோடா பங்கின் விலை 1.48 சதவீதம் உயர்ந்து ரூ. 246.60 ஆக வர்த்தகமானது.

summary

Bank of Baroda said its consolidated net profit dropped 48 per cent to Rs 1,783 crore in the June quarter of FY27.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments