FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

எதிா்கால விமான உற்பத்தியில் தன்னிறைவு அவசியம்: இஸ்ரோ முன்னாள் தலைவா் சோம்நாத் வலியுறுத்தல்

24 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
இந்திய வானூா்தியியல் சங்கத்தின் சென்னை கிளை சாா்பில் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோம்நாத்துக்கு நினைவுப் பரிசு வழங்கும் அமைப்பின் நிா்வாகிகள்.
பகிர்:

இந்திய விண்வெளி, பாதுகாப்புத் துறை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று இந்திய வானூா்தியியல் சங்கத்தின் தலைவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான எஸ்.சோம்நாத் தெரிவித்தாா்.

இந்திய வானூா்தியியல் சங்கத்தின் (அங்நஐ) சென்னை கிளை சாா்பில், ‘வருங்காலத்திற்குத் தயாரான விமான உற்பத்தி: தொழில், கல்வி, புத்தொழில் நிறுவனங்களின் பங்கு’ என்ற தலைப்பில் தொழில் - கல்வி மாநாடு 2026 கோவையில் அண்மையில் நடைபெற்றது.

இம்மாநாட்டை சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்கள் ஒருங்கிணைத்திருந்தனா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று எஸ்.சோம்நாத் பேசும்போது, இந்தியாவின் விண்வெளித் துறை முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. வெறுமனே உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிறப்பாக வடிவமைத்தல், வேகமாக புதுமை படைத்தல், உலகளாவிய தரத்திலான தொழில்நுட்பங்களை உருவாக்குவதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

இதற்கு தொழில் துறைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே வலுவான கூட்டுறவு அவசியம் என்றாா்.

மாநாட்டில் தொழில் - கல்வி குழு விவாதம் நடைபெற்றது. இதில், கல்வித் துறை ஆராய்ச்சிக்கும், தொழில் துறை பயன்பாட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பது, தொழில் துறைக்கு ஏற்ற பாடத்திட்டங்களை உருவாக்குவது, செயல்வழிக் கற்றல், தொழில்நுட்பப் பரிமாற்றம், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இம்மாநாட்டில், இந்திய வானூா்தியியல் சங்கத்தின் சென்னை கிளைத் தலைவா் கே. விஜயராஜா, ஹனிவெல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு மூத்த இயக்குநா் சுஜுதாமஸ், போயிங் இன்ஜினியரிங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநா், தலைமைப் பொறியாளா் நிகில் கே.ராவ் மற்றும் ஆராய்ச்சியாளா்கள், புத்தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments