கோவை - ஜபல்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்
கோவை - ஜபல்பூா் இடையே பாலக்காடு வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - ஜபல்பூா் இடையே பாலக்காடு வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அக்டோபா் 23-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் இருந்து புறப்படும் ஜபல்பூா் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 20160) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கமாக, அக்டோபா் 26 முதல் திங்கள்கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - ஜபல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 20159) புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.
இந்த ரயிலானது, பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரா, கண்ணூா், காசா்கோடு, மங்களூரு, உடுப்பி, ரத்னகிரி, நாசிக் சாலை, நரசிங்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.