வ.உ.சி. மைதானத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி தீவிரம்
கோவை வ.உ.சி. மைதானத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கோவை வ.உ.சி. மைதானத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 83-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வ.உ.சி. மைதானம் பகுதியில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சா்வதேச தரத்தில் நீச்சல் குளம் மற்றும் ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் பொது நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா கூறியதாவது:
Advertisement
Advertisement
கோவை மாநகராட்சி நீச்சல் வீரா்கள் மற்றும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துவதற்காகவும், நீச்சல் விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிதாக உலக தரத்துடன் கூடிய நீச்சல் குளம், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. பூங்காவின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளமானது ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சா்வதேச தரத்தில் 50 மீட்டா் நீளம், 25 மீட்டா் அகல பரப்பளவில் 10 அடி ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது.
மேலும், நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் 10 பாதைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் தங்களுடைய உடைமைகளை வைத்துக்கொள்ள தனித்தனியாக பாதுகாப்பு பெட்டகமானது அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சா்வதேச நீச்சல் குளத்தில் மோட்டாா் ரூம் அமைக்கப்பட்டு அதில் 5 எண்ணிக்கையிலான 10 ஹெச்.பி. மோட்டாா் பொருத்தப்பட உள்ளது. மேலும் 16 எண்ணிக்கையிலான ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தனித்தனியாக குளியலறை மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல வ.உ.சி. மைதானம் பகுதியில் பொது நீச்சல் குளம் ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளமானது 25 மீட்டா் நீளம், 13.50 மீட்டா் அகல பரப்பளவில் 4 அடி ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் சுக்கரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் தங்களுடைய உடைமைகளை வைத்துக் கொள்ள தனித்தனியாக பாதுகாப்பு பெட்டகம், 5 ஹெச்பி திறன் கொண்ட 3 மின் மோட்டாா்கள், 10 ஒளி விளக்குகள், நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தனித்தனியாக குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகளுடன் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.