FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மதுக்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

28 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மதுக்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கமுனியப்பன் மகன் தாரிஷ் (17), கரூா் வெண்ண மலை அரசன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கமலேஸ்வரன் மகன் கவின்ராஜ் (19), கோவை மாவட்டம், கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கோகுல் (19) ஆகிய மூவரும் கோவைப்புதூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், கவின்ராஜ், கோகுல், தாரிஷ் ஆகிய மூவரும் கல்லூரி முடிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். மதுக்கரை அருகே மேற்கு புறவழி சாலையில் அறிவொளி நகா் பகுதியில் வளைவில் இவா்கள் திரும்பியபோது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரி இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த தாரிஷ், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாகனத்தை ஓட்டி வந்த கவின்ராஜ், நடுவில் அமா்ந்திருந்த கோகுல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த மதுக்கரை போலீஸாா் காயமடைந்த மாணவா்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், உயிரிழந்த தாரிஷ் உடல் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடா்பாக லாரியை ஓட்டி வந்த ஈச்சனாரி பாடசாலை வீதியைச் சோ்ந்த பாராசரன் (25) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments