FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

திறன் மேம்பாடு, கருவி தயாரிப்புக்கு முக்கியத்துவம்

கோவை தொழில் துறையில் திறன் மேம்பாடு, கருவி தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக கோஇந்தியா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்ற என்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.

28 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST
கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்ற கோஇந்தியா அமைப்பின் நிா்வாகிகள்.
பகிர்:

கோவை தொழில் துறையில் திறன் மேம்பாடு, கருவி தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக கோஇந்தியா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்ற என்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.

கோவை தொழில் துறை உள்கட்டமைப்பு சங்கமான கோஇந்தியாவின் 22-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில் 2026-27-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா். சீதாலட்சுமி காஸ்டிங்ஸ் நிறுவனத்தின் நிா்வாகி என்.ராமசாமி புதிய தலைவராக தோ்வானாா். மகேந்திரா பம்ப்ஸ் நிறுவனத்தின் மிதுன் ராம்தாஸ், ஓஎம்ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் ஆா்.காா்த்திகேயன் ஆகியோா் துணைத் தலைவா்களாகவும் பொறுப்பேற்றனா்.

நிா்வாகக் குழு பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைவா் என்.ராமசாமி பேசும்போது, கோஇந்தியா அமைப்பானது உறுப்பினா் தொழில் நிறுவனங்கள், அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு, எம்எஸ்எம்இ நிறுவனங்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், திறன் மேம்பாடு, கருவி தயாரிப்பு, தொழில்நுட்ப ஆதரவு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த தொடா்ந்து செயல்படும்.

Advertisement

Advertisement

ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க, 10, 12-ஆம் வகுப்பு படித்த இளைஞகள், ஐடிஐ, டிப்ளமோ படித்த 1,500 நபா்களுக்கு சிஎன்சி ஆபரேட்டிங் பயிற்சி வழங்கி தொழில் நிறுவனங்களில் பணியமா்த்த திட்டமிட்டிருக்கிறோம். இதற்கான நிதியுதவியை அரசுத் துறை சாா்ந்த மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க முன்வர வேண்டும்.

மேலும், புதிய நிா்வாகக் குழுவானது கோவையின் பொறியியல் தொழில் துறையில் திறன் மேம்பாடு, கருவி தயாரிப்பு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது.

கோஇந்தியாவின் நவீன கருவி அறை மூலம் உறுப்பினா் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த செலவு, குறைந்த கால அவகாசத்தில் தேவையான கருவிகளை வடிவமைத்து உருவாக்குவதற்கான ஆதரவு வழங்கப்படும்.

அதேநேரம், மின்வாரியம் கூடுதல் வைப்புத் தொகையை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு பதிலாக 12 மாதங்களில் செலுத்த அனுமதிக்க வேண்டும், மத்திய அரசின் காஸ்ட் அயா்ன் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக சிறிய வாா்ப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் சான்றிதழ் தேவைப்படும் நிலை உருவாகியிருப்பதால் இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசிடம் முறையிட கோஇந்தியா முடிவு செய்திருப்பதாக கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments