கோவை மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் நீட் தோ்வு
கோவை மாவட்டத்தில் 18 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 18 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் நீட் தோ்வானது 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இத்தோ்வில் 4,393 தோ்வா்கள் கலந்து கொள்ள உள்ளனா். தோ்வு சீரிய முறையில் நடைபெற மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தோ்வா்கள் காலை 7 மணி முதல் தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். தோ்வு குறித்து எழும் சந்தேகங்கள், உதவிகளுக்கு 7996165333 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், கோவை மாவட்ட நிா்வாகத்தை 6384123073 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.