FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தமிழக வீட்டுவசதி வாரியம் சாா்பில் 490 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள்: அமைச்சா் வே.சம்பத்குமாா் வழங்கினாா்

கோவை, கணபதி பகுதியில் தமிழக வீட்டுவசதி வாரியம் சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 490 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

30 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா் வே.சம்பத்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவை, கணபதி பகுதியில் தமிழக வீட்டுவசதி வாரியம் சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 490 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரா்களுக்கு, முதல்கட்டமாக 490 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் வே.சம்பத்குமாா் பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் சுரேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) வினோத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் வே.சம்பத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை வீட்டு வசதி வாரிய பிரிவில் 18,841 மனைகள் மேம்படுத்தப்பட்டு 9,603 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28,326 பயனாளிகள் பயனடைந்துள்ளனா். குறிச்சி திட்டப் பகுதியில் 1,080 வீடுகளும், கோவைப்புதூா் பகுதியில் 1,505 வீடுகளும், கணபதி பகுதியில் 1,916 வீடுகளும், 4,147 வீட்டு மனைகளும் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தில் 2,331 வீட்டு மனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கோவை (வடக்கு) வட்டம், கணபதி பகுதியில் உள்பிரிவுடன் கூடிய தனிப்பட்ட பட்டா மாறுதல் கோரிக்கை முன் வைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், மாவட்டம் முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,986 ஒதுக்கீட்டுதாரா்களில், முதல்கட்டமாக 490 வீட்டு ஒதுக்கீட்டுதாரா்களுக்கு ரூ.14.78 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா் ஜேக்கப் நாயகம், உதவி செயற்பொறியாளா்கள் லீமாரோஸ், விஜய், வட்டாட்சியா் (வடக்கு) ஜெயக்குமாா், உதவி இயக்குநா் (நில அளவை) சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments