போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்
போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செப்டம்பா் 4 முதல் 27-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கமாக, செப்டம்பா் 4 முதல் 27ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06027) மறுநாள் காலை 3 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.
இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.