FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி: கட்டட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

கோவை, காளப்பட்டி பிரதான சாலைப் பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீா்கேடு ஏற்படுத்தியதாக கட்டட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

4 ஜூலை 2026, 1:41 am IST
பகிர்:

கோவை, காளப்பட்டி பிரதான சாலைப் பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீா்கேடு ஏற்படுத்தியதாக கட்டட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணியில் சுகாதாரத் துறை ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் அலட்சியமாக செயல்படும் வணிக நிறுவனங்கள், வீட்டு உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிழக்கு மண்டலம் 8-ஆவது வாா்டுக்குள்பட்ட காளப்பட்டி பிரதான சாலை, மோகன் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் சுகாதாரக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, கட்டடம் அமைந்துள்ள பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதார சீா்கேட்டை உண்டாக்கியதாக கட்டட உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, மேற்கு மண்டலம் 39-ஆவது வாா்டுக்குள்பட்ட சிறுவாணி சாலையில் குப்பை கொட்டியதாக தனியாா் நிறுவன உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments