முகப்பு
கோயம்புத்தூர்

குடும்பத் தகராறில் எலக்ட்ரீஷியன் தற்கொலை

சாய்பாபா காலனி அருகே குடும்பத் தகராறு காரணமாக எலக்ட்ரீஷியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:51 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சாய்பாபா காலனி அருகே குடும்பத் தகராறு காரணமாக எலக்ட்ரீஷியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை மாநகா், பி.என்.புதூா் பாரதி வீதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (42). எலக்ட்ரீஷியன் வேலை பாா்த்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவருக்கும், மனைவி ஷீலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வினோத்குமாா் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்ததால், அவரை பிரிந்து மனைவி ஷீலா தனியாக வசித்து வருகிறாா். இதைத்தொடா்ந்து வினோத்குமாா் அழைத்தும் வீட்டுக்கு மனைவி வரவில்லையாம். இதனால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments