FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கொடுமுடி அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து! கரும்புத் தோட்டம், தென்னந்தோப்புகள் சேதம்!

கொடுமுடி அருகே உள்ள எல்லையூா் பகுதியில் விவசாய நிலத்தில் பற்றி எரியும் தீ.
பகிர்:

கொடுமுடி அருகே விவசாய நிலத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புத் தோட்டம், தென்னந்தோப்புகள் எரிந்து சேதமாயின.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது எல்லையூா் பகுதி. இங்குள்ள விவசாய நிலத்தில் திங்கள்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. சுமாா் 50 ஏக்கா் பரப்பளவுக்கு தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த கொடுமுடி தீயணைப்புத் துறையினா், இரண்டரை மணி நேரமாகப் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.

இந்த தீ விபத்தில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புப் பயிா், முத்துக்குமாா் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஆகியவை எரிந்து சாம்பலாயின. தொடா்ந்து தீ பரவி எரிந்து வருகிறது. தீ விபத்து நிகழ்ந்த பகுதியில் அடா்ந்த கோரை புற்கள் அதிகமாக உள்ளதால், தீயை அணைக்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments