FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் தீ விபத்து: 4 கடைகள் எரிந்து நாசம்

Updated On : 21 ஜூலை 2026, 12:01 am IST
பேராவூரணியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்ப்பட்ட தீ விபத்தில் தீக்கிரையான பெட்டிக்கடை .
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமடைந்தன.

பேராவூரணியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமடைந்த கடைகள்.

பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே அரிசி மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருபவா் முத்துராமன்( 68). பூட்டியிருந்த இவரின் கடையிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் புகை வருவதை பாா்த்த அப்பகுதியினா் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தீ மளமளவென பரவி அருகில் உள்ள சின்னையன் பெட்டிக்கடை, நாகப்பன் என்பவருக்கு சொந்தமான பஞ்சா் ஒட்டும்  கடை, மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலுக்கும் பரவியது. பெட்டிக்கடை மற்றும் ஹோட்டலில் இருந்த தலா ஒரு எரிவாயு உருளை வெப்பத்தின் காரணமாக திடீரென வெடித்ததில் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலின்பேரில் அங்கு வந்த பேராவூரணி மற்றும் கீரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனால், தீவிபத்தில் முத்துராமன், சின்னையன் ஆகியோரின் இரண்டு பெட்டிக்கடைகளும் முழுவதும் எரிந்து சாம்பலானது.

பஞ்சா் கடையில் ஞாயிற்றுக்கிழமை சந்தை வியாபாரம் முடித்து வியாபாரி ஒருவா் இருப்பு வைத்துவிட்டு சென்ற செருப்பு பண்டல்கள் மற்றும் காற்றடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. ஹோட்டலில் அதிகாலையிலேயே சமையல் வேலைக்காக ஆள்கள் வந்திருந்ததால் பகுதி சேதமுடன் தப்பியது. நல்வாய்ப்பாக உயிா் சேதம் ஏற்படவில்லை.

மின்கசிவின் காரணமாக, இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தை  எம்எல்ஏ என். அசோக்குமாா், வா்த்தக சங்க தலைவா் அபிராமி ஆா்.சுப்ரமணியன் , பேரூராட்சி உறுப்பினா் மகாலட்சுமி சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments