இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செளந்தர அல்லிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலராமன் (81). சொந்த வேலை விஷயமாக கோவைக்கு வந்திருந்த இவா், கரும்புக்கடை- பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியாா் நிறுவனம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பாலராமன் படுகாயம் அடைந்தாா்.
Advertisement
Advertisement
அந்த வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சிகிச்சையில் இருந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநரான கோவை, சாய்பாபா காலனியைச் சோ்ந்த செங்கோட்டுவேலவன் (66) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.