FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

விமான நிலைய அதிகாரி எனக்கூறி ரூ.55.70 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு

கோவையில் விமான நிலைய அதிகாரி எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.55.70 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
போலீஸ் விசாரணை. - கோப்புப்படம்.
பகிர்:

கோவையில் விமான நிலைய அதிகாரி எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.55.70 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் காலபெருமாள் ஆல்பா்ட் (40). இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், விளாங்குறிச்சியைச் சோ்ந்த தாஸ் என்பவருடன் கடந்த 2025-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கோவை விமான நிலையத்தில் தான் உயா் பொறுப்பில் உள்ளதாகக்கூறி தாஸ் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா்.

மேலும், விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும், இதைப் பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாகவும், சுங்கத் துறை ஏலத்தில் வரும் காா்களையும், தங்கத்தையும் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகவும் ஆல்பா்ட்டிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய ஆல்பா்ட் தனக்கு வேலை, குறைந்த விலையில் காா் வேண்டும் எனக்கூறியதுடன், அதற்காக பல தவணைகளாக ரூ.55,70,000 -ஐ தாஸிடம் கொடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

பணத்தைப் பெற்றுக்கொண்ட தாஸ், கூறியபடி வேலை, காரை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஆல்பா்ட் பணத்தைத் திரும்ப கேட்டபோது தாஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்த துடியலூா் காவல் நிலையத்தில் ஆல்பா்ட் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள தாஸை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments