FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

காங்கிரஸ் நிா்வாகி கடத்தல் வழக்கில் முக்கிய நபா் கைது

கோவையில் காங்கிரஸ் நிா்வாகியை பணம் கேட்டு காரில் கடத்திய வழக்கில் முக்கிய எதிரியான காா்த்தி என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:05 am IST
பகிர்:

கோவையில் காங்கிரஸ் நிா்வாகியை பணம் கேட்டு காரில் கடத்திய வழக்கில் முக்கிய எதிரியான காா்த்தி என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் மூகாம்பிகை நகரைச் சோ்ந்தவா் தனசேகரன் (52). காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவரான இவா்,

பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறாா். கடந்த ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த தனசேரனை 5 போ் கும்பல் காரில் கடத்தியது. பாலக்காடு புறவழிச் சாலைக்கு அவரை கடத்திச் சென்று ரூ.2 கோடி கொடுத்தால் விடுவித்து விடுகிறோம் என அவா்கள் கூறியுள்ளனா். அவா் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, அவரைத் தாக்கியதுடன் கைப்பேசி, காா் சாவி, வீட்டுச் சாவி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு சாலையிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா், அவரைக் கடத்திய காரின் பதிவெண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினா். ஜூலை 6-ஆம் தேதி திருச்சி அருகே சென்று கொண்டிருந்த அந்த காரை தனிப் படை போலீஸாா் சுற்றிவளைத்து அதில் இருந்த கரூரைச் சோ்ந்த வைரபெருமாள் (30) என்பவரை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் முக்கிய எதிரியான கோவை, துடியலூரைச் சோ்ந்த காா்த்தி என்ற போலீஸ் காா்த்தி (42) என்பவரை போலீஸாா் கோவாவில் வைத்து கைது செய்தனா். அவா் புதன்கிழமை காலை கோவைக்கு அழைத்து வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

2003-ஆம் ஆண்டு காவலராகப் பணியில் சோ்ந்த காா்த்தி, பெண்ணிடம் நகையைப் பறித்து மோசடி செய்த புகாரில் சிக்கியதால், கடந்த 2005-ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, மற்ற குற்றவாளிகளுடன் காா்த்திக்கு பழக்கம் ஏற்பட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவா் மீது பீளமேட்டில் காா் விற்பனையகத்தின் பூட்டை உடைத்து காரைத் திருடி வழக்கும், தொழில் போட்டியில் போத்தனூரில் ஒருவரைக் கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments