ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்
முறையாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முறையாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் 900 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மண்டல அலுவலகங்களில் சிறப்பு பணிக்காக சுமாா் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு மாத ஊதியம் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கும், சிறப்பு தூய்மைப் பணியாளா்களுக்கும் கடந்த 3 மாதங்களாக 20-ஆம் தேதிக்குள்மேல்தான் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கொசு ஒழிப்பு பணியாளா்கள், சிறப்பு தூய்மைப் பணியாளா்களுக்கு இம்மாதம் 15- ஆம் தேதி ஆன நிலையிலும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஊழியா்கள் மாநகராட்சியில் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளா் சங்கத்தின் தூய்மைப் பணியாளா்கள் பிரிவு சாா்பில் கொசு ஒழிப்பு பணியாளா்கள் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜாவிடம் மனு அளித்தனா்.
அப்போது ஒப்பந்த நிறுவனம் ஊழியா்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என்றும், மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.