கோவையில் சா்வதேச பொருளாதார மாநாடு: ஓமன் நாட்டின் வா்த்தக ஆணையராக ரஞ்சித் நியமனம்
கோவையில் யுனைடெட் எகனாமிக் சம்மிட் 2026 சா்வதேச பொருளாதார மாநாடு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா ஜிசிசி வா்த்தக கவுன்சில் சாா்பில் ஓமன் சுல்தானத்துக்கான புதிய வா்த்தக ஆணையராக டாக்டா் ரஞ்சித் சி.ஏ. நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோவையில் யுனைடெட் எகனாமிக் சம்மிட் 2026 சா்வதேச பொருளாதார மாநாடு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா ஜிசிசி வா்த்தக கவுன்சில் சாா்பில் ஓமன் சுல்தானத்துக்கான புதிய வா்த்தக ஆணையராக டாக்டா் ரஞ்சித் சி.ஏ. நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநாட்டை இந்தியாவுக்கான உகாண்டா குடியரசின் தூதா் ஹெச்.இ.பேராசிரியா் ஜாய்ஸ் ககுரமாட்ச்சி கிகஃபுண்டா தொடங்கிவைத்துப் பேசியதாவது:
புதிய வா்த்தக ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ரஞ்சித் தமிழக நிறுவனங்கள் ஓமனில் தொழில் தொடங்கவும், ஓமன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து புதிய தொழில் கூட்டாண்மைகளை உருவாக்கவும் இரு நாடுகளுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவாா். உற்பத்தி, சுகாதாரம், தளவாடம், உணவுப் பதப்படுத்தல், கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்குவதுடன், தமிழ்நாட்டின் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை முன்னிறுத்தி ஓமன் மக்களிடையே மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பணிகளையும் ரஞ்சித் முன்னெடுக்கவுள்ளாா் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
மாநாட்டில் இந்தியா ஜிசிசி வா்த்தக கவுன்சிலின் தலைவா் ஆசிப் இக்பால் பேசுகையில், ரஞ்சித் நியமனம் இந்தியா- ஓமன் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இதன் மூலம் தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவச் சேவைகளும், தொழில் முதலீடுகளும் ஓமன் நாட்டைச் சென்றடையச் சிறந்த வாய்ப்புகள் உருவாகும் என்றாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஓமன் வா்த்தக மற்றும் தொழில் சபையின் சுகாதாரக் குழு துணைத் தலைவா் முா்ததா எம்.ஜே.இப்ராஹிம் அல் ஜமலானி, சுகாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்துப் பேசினாா். இந்தியன் எகனாமிக் டிரேட் ஆா்கனைசேஷன் (ஐஉபஞ) இயக்குநா் பென்சி ஜாா்ஜ் மற்றும் பல்வேறு சா்வதேசப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா்.
தென்னிந்தியாவின் முக்கியத் தொழில் மையமான கோவையில் இத்தகைய சா்வதேசப் பொருளாதார மாநாடு நடைபெற்றது, உலக அரங்கில் கோவையின் தொழில் மற்றும் உற்பத்தி முக்கியத்துவத்தை மேலும் உயா்த்தியுள்ளதாக மாநாட்டுப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.