கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது
ஒடிஸாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை செல்வபுரம், இ.யு.டி.பி. காலனி பகுதியில் செல்வபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வடமாநில இளைஞரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவரது பையில் 2 கிலோ 750 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு சிறிய மின்னணு தராசு இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாபிநாயக் (29) என்பதும், அவரது சொந்த மாநிலத்திலிருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கஞ்சா மற்றும் கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்து, பாபிநாயக்கைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் இருவா் கைது:
கோவை சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையத்தில் உள்ள பூங்கா அருகே இளைஞா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தப் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில், வேலாண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (24) மற்றும் முகமது ஆசிக் (25) ஆகிய இருவரையும் பிடித்து சோதனையிட்டனா்.
அவா்களிடமிருந்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் கஞ்சா, 400 டாபென்டாடால் போதை மாத்திரைகள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி ஆகியவை இருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.