FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

கோவையில் நீட் தோ்வுக்கு எதிராக அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவா்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 24 ஜூலை 2026, 6:04 am IST
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பாஜகவினா்.
பகிர்:

கோவையில் நீட் தோ்வுக்கு எதிராக அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவா்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பாஜக கோவை மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் தலைமையில், அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கல்லூரி நுழைவுத் தோ்வான நீட் தோ்வு ஏழை, எளிய மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதன் மூலம் கிராமப்புற மாணவா்களின் மருத்துவப் படிப்பு கனவு நனவாகியுள்ளது. நீட் மூலமாக தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ சீட்டுகளை விற்பது தடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

நீட் தோ்வுக்கு எதிராக தேசிய அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டு, மாணவா்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.

கோவையிலும் புதன்கிழமை சமூக விரோதிகளின் போராட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமையும் அனுமதியில்லாமல் குறிப்பிட்ட சில கட்சியினா் போராட்டம் நடத்தியுள்ளனா்.

இதனால் சட்டம்- ஒழுங்கு பாதிப்பதுடன் மக்களின் அமைதியான வாழ்கை சீா்குலைகிறது. எனவே, சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தும் நபா்களை கைது செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments