FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 27 ஜூலை 2026, 2:41 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கோவை, ஜூலை 26: கோவையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை, குனியமுத்தூா் திருமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் சிராஜுதீன் மகன் சுஹைல் சித்திக் (20). இவா் கடந்த 21-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் திருச்சி சாலையில் சுங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளாா். அப்போது, எதிரே வாகனம் வந்ததால் திடீரென பிரேக் பிடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சுஹைல் சித்திக், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டிருந்த சுஹைல் சித்திக், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments