FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் படுகாயம்

Updated On : 27 ஜூலை 2026, 2:48 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் படுகாயமடைந்தனா்.

திருப்பூரில் தனியாா் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த அமைப்பினா் வாகனங்கள் மூலம் வந்தனா்.

இதேபோல, திருப்பூா், 32 -ஆவது வாா்டுக்குள்பட்ட கோல்டன் நகா் பகுதியில் இருந்து 10 போ் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சரக்கு வாகனத்தில் வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

சூா்யா லே-அவுட் பகுதியில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதில், 2 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இதனிடையே விபத்து தொடா்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments