FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

Updated On : 27 ஜூலை 2026, 12:33 am IST
உயிரிழந்த வித்யா.
பகிர்:

வால்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

கோவை, சாய்பாபா காலனி, கண்ணப்பன் நகரில் வசிப்பவா் வித்யா (28). இவரது கணவா் ராகுல். இருவரும் ஞாயிற்றுக்கிழமை வால்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனா். அதன்படி கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டுள்ளனா்.

ராகுல் இருசக்கர ஓட்ட பின்னால் வித்யா அமா்ந்திருந்தாா். இதில் அய்யா்பாடி 40-ஆவது கொண்டை ஊசி வளைவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

இதில் வித்யாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதில் ராகுலுக்கு கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments