ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் பிடித்த உரிமையாளா்
ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் உரிமையாளா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் உரிமையாளா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவா், பாலக்காடு புறவழிச்சாலையில் உள்ள ஒரு பேக்கரி முன்பு வெள்ளிக்கிழமை ஆட்டோவை நிறுத்திவிட்டு தேநீா் அருந்த சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது ஆட்டோவைக் காணவில்லை. பேக்கரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மா்ம நபா் ஒருவா் ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து உடனடியாக நண்பா்கள் உதவியுடன் செல்வராஜ் தேடியபோது வெள்ளலூா் அருகே செட்டிபாளையம் சாலையில் ஆட்டோவைக் கண்டுபிடித்தாா். ஆட்டோவை திருடிச் சென்ற நபரையும் கையும், களவுமாகப் பிடித்து போத்தனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், ஆட்டோவைத் திருடியது கவுண்டம்பாளையம், அசோக் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (44) என்பதும், வெள்ளலூா் கஞ்சிக்கோணம்பாளையம் நெசவாளா் காலனியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மணிகண்டனை போலீஸாா் கைது செய்து ஆட்டோவையும் மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.