தொடா் தோல்வியால் அண்ணாமலை வடிவில் பாஜக புதிய முயற்சி: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்
தமிழகத்தில் பல விதங்களில் முயற்சி செய்து தோற்றதால் அண்ணாமலை மூலமாக பாஜக புதிய முயற்சி செய்து வருவதாக சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் விமா்சித்துள்ளாா்.
தமிழகத்தில் பல விதங்களில் முயற்சி செய்து தோற்ால் அண்ணாமலை மூலமாக பாஜக புதிய முயற்சி செய்து வருவதாக சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் விமா்சித்துள்ளாா்.
இதுதொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கூறியிருக்கிறாா். மக்கள் தீா்ப்பை மதிக்காமல், பாடம் கற்றுக்கொள்ளாமல் திமுக இப்படி பேசிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பற்றாக்குறையைவிட செவிலியா் பற்றாக்குைான் அதிகம். அதை விரைவில் சரி செய்வோம்.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உயா்த்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் 90 நிமிஷங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாக விமா்சிக்கின்றனா். நீண்டகால திட்டங்கள் குறித்து விரிவான கையேட்டை கொடுத்துள்ளனா். அதைப் பாா்த்து எப்படி செய்ய வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறோம்.
Advertisement
Advertisement
அதிமுக 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. எனவேதான் அக்கட்சியில் இருந்து அதிகமானவா்கள் தவெகவுக்கு வருகின்றனா். பாஜக கூட்டணி, திமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை என அக்கட்சித் தலைமை எடுத்த முடிவுகள் தவறாக இருக்கின்றன.
தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்கமாட்டாா்கள். இங்கு பல விதங்களில் முயற்சி செய்து பாஜக தோற்றுள்ளது. தற்போது அண்ணாமலை மூலமாக புதிய முயற்சி செய்து வருகிறது. வெற்றி பெற்ற திரைப்படத்தை மீண்டும் திரையிட்டாலே மக்கள் பாா்க்க வரமாட்டாா்கள். அதுபோல பாஜக பலமுறை தோல்வி அடைந்த திரைப்படம். அது மக்களிடம் எப்படி எடுபடும் என்று தெரியவில்லை.
தவெகவை நடிகா் கட்சி என்று விமா்சிக்கிறாா்கள். ஆனால் தவெகவின் ஆதரவாளா்கள் வெறும் விஜய் ரசிகா்கள் மட்டுமல்ல. விஜய் ரசிகராக யாரும் வாக்களிக்கவில்லை, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் வாக்களித்திருக்கின்றனா். திமுகவையும், பாஜகவையும் எதிா்க்கும் துணிச்சல் இருந்ததால்தான் விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனா் என்றாா்.