FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை புகா், தெற்கு மாவட்ட அதிமுக செயலராக செ.ம.வேலுசாமி பொறுப்பேற்பு

Updated On : 8 ஜூன் 2026, 4:56 am IST
கோவை இதயதெய்வம் மாளிகையில் அதிமுக புறநகா் தெற்கு மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செ.ம.வேலுசாமி.
பகிர்:

கோவை புகா், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், அதிமுகவில் முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவினா், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அதிமுக புகா் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு பதிலாக, அப்பதவியை முன்னாள் அமைச்சரான செ.ம.வேலுசாமிக்கு வழங்குவதாக கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, கோவையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாகச் சென்று அவிநாசி சாலையில் உள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணாதுரை, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதைத்தொடா்ந்து, கோவை அதிமுக அலுவலகத்தில் கோவை புகா், தெற்கு மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவருக்கு அதிமுக மாநகா், மாவட்ட செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன், புகா் வடக்கு மாவட்ட செயலாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், முத்து கருப்பண்ணசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

அதைத்தொடா்ந்து, அதிமுக செயல் வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

கோவையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக புறநகா், தெற்கு மாவட்ட செயலாளா் செ.ம.வேலுசாமி உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments