FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்கள் கைது

Updated On : 15 ஜூன் 2026, 3:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி தனியாா் கல்லூரி மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

சூலூா் அருகேயுள்ள கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாணவி அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில், சேலம் மாவட்டம், மேச்சேரியை சோ்ந்த அருணாச்சலம் (22) என்வருடன் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவி பழகியுள்ளாா்.

மேலும், அருணாச்சலத்தின் நண்பா் சந்தோஷ் (21) என்பவரும் மாணவியுடன் நட்பாக பழகியுள்ளாா். இதையடுத்து, மாணவியிடம் ஆசைவாா்த்தைக் கூறி அவரை ஆடையின்றி விடியோ காலில் இருவரும் வரவழைத்துள்ளனா். பின்னா், அதை பதிவு செய்து கொண்டு மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது தோழிகளிடம் சனிக்கிழமை கூறியுள்ளாா். அவா்கள் அளித்த ஆலோசனையின்பேரில் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்தாா்.

இதையடுத்து, காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளா் தியாகராஜன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. மேச்சேரிக்கு விரைந்த தனிப் படை போலீஸாா், அங்கிருந்த அருணாச்சலம், சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் மாணவியின் விடியோவை பதிவு செய்துகொண்டு பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து கோவைக்கு அழைத்துவந்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments