FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்டு மிரட்டல்: பேரூராட்சி உறுப்பினரின் கணவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டிய பேரூராட்சி உறுப்பினரின் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 4:10 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டிய பேரூராட்சி உறுப்பினரின் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுந்தரபாண்டியம் அகத்தபட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (56). அரசு ஒப்பந்ததாரா். இவா் வ. புதுப்பட்டி பேரூராட்சியில் தெருக்களில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறாா்.

பேரூராட்சி நான்காவது வாா்டு உறுப்பினரின் கணவா் சின்னபிச்சை மலையான் (54), ராஜேந்திரனிடம் கமிஷன் கேட்டு பிரச்னை செய்தாா். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், வத்திராயிருப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து சின்ன பிச்சை மலையானை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments