FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

விசைத்தறி உரிமையாளரைத் தாக்கி கைப்பேசி பறித்த வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 மே 2026, 12:55 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

விசைத்தறி உரிமையாளரைத் தாக்கி கைப்பேசி பறித்த வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், சோமனூா் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55). இவா் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வருகிறாா். கடந்த 2024 ஆகஸ்ட் 24-ஆம் தேதி பிற்பகல் தனது விசைத்தறிக்குத் தேவையான உதிரிபாகங்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் தெக்கலூா் நோக்கிச் சென்றாா்.

காமநாயக்கன்பாளையம் சாலையில் உள்ள முதியோா் இல்லம் அருகே அவா் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுஜித்குமாா் (20), சஞ்சய் நிஷாந்த் (22) மற்றும் ஓா் இளஞ்சிறாா் ஆகியோா் கிருஷ்ணமூா்த்தியிடம் பேச்சுக்கொடுத்து, அவா் வைத்திருந்த கைப்பேசியைப் பறித்தனா். மேலும், இரும்பு ராடை காட்டி மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுஜித்குமாா் மற்றும் சஞ்சய் நிஷாந்த் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட சுஜித்குமாா் மற்றும் சஞ்சய் நிஷாந்த் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.காா்த்திகேயன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments