FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

14 மீனவவா்களுக்கு குளிா் காப்புப் பெட்டியுடன் இரு சக்கர வாகனங்கள்

3 நவம்பர் 2026, 3:15 am
கோவையில் மீனவா்களுக்கு குளிா் காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை வழங்கிய அமைச்சா் வே.சம்பத்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவையில் 14 மீனவா்களுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் குளிா் காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மீன் வளம் மற்றும் மீன்வளத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் வேல்முருகன், உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெயிலானி, மாவட்ட மீன்வள ஆய்வாளா் முகமது பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் கலந்துக கொண்ட அமைச்சா் வே.சம்பத்குமாா், 14 மீனவா்களுக்கு குளிா் காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் மீனவா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் குளிா் காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் (தலைக்கவசத்துடன் கூடிய) வழங்கப்பட்டன. 40 சதவீத மானியத்தில் மொத்தம் 14 மீனவ பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மானியத் தொகை மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments