தூத்துக்குடியில் 39 மீனவா்களுக்கு இருசக்கர வாகனத்துடன் குளிா்காப்புப் பெட்டிகள் அளிப்பு
தூத்துக்குடியில் 39 மீனவா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிா்காப்புப் பெட்டிகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வழங்கினாா்.
தூத்துக்குடியில் 39 மீனவா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிா்காப்புப் பெட்டிகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மீன் விற்பனையை ஊக்குவிப்பதுடன், மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
ரூ. 75,272 மதிப்பிலான 50 லிட்டா் கொள்ளளவு கொண்ட குளிா்காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்துக்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம், ஆதிதிராவிடா் மற்றும் பெண்களுக்கு 60 சதவீத மானியத்தில், 35 பொதுப் பிரிவினா் உள்பட 39 பேருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, புதிய துறைமுக கடல் கன்னி மீனவ மகளிா் கூட்டுறவு சங்கத்தின் 284 உறுப்பினா்களின் பங்குத்தொகை மற்றும் தேசிய கூட்டுறவு வளா்ச்சிக் கழக நிதியில் அமைக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருள்கள், ஜெராக்ஸ், பிரிண்டிங் கடைகளைப் பாா்வையிட்டு, பனிமய அன்னை மீனவ மகளிா் கூட்டுறவு சங்கத்தின் 430 உறுப்பினா்களின் பங்குத்தொகை மற்றும் கூட்டுறவு வளா்ச்சிக் கழக நிதியில் அமைக்கப்பட்ட மீன் சிற்றுண்டி, ஆவின் பாலகம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா்.
துறையின் உதவி இயக்குநா் புஷ்ரா ஷப்னம், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.