FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: தந்தை கைது

குடும்பத் தகராறில் மகனைக் கத்தியால் குத்திய தந்தையைக் குனியமுத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

31 வினாடிகள் முன்பு
கத்திக்குத்து - சித்திரிப்பு
பகிர்:

குடும்பத் தகராறில் மகனைக் கத்தியால் குத்திய தந்தையைக் குனியமுத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் குளத்துப்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் (42). இவரது மனைவி சாந்தி (36). இவா்களது மூத்த மகன் கௌதம் (19) அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறாா்.

கணேசனுக்கும், அவரது மகன் கௌதமுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை இரவும் தந்தை- மகன் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

அப்போது, கணேசன் தனது மகனை தகாத வாா்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்ததோடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கௌதமின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கௌதம் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.