FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் சாலையில் உலவும் காட்டெருமைகள்: வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்தல்

வால்பாறையில் காட்டெருமைகள் இரவு நேரங்களில் சாலைகளில் உலவுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

13 நவம்பர் 2026, 11:43 pm
அக்காமலை எஸ்டேட் சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டெருமை.
பகிர்:

வால்பாறையில் காட்டெருமைகள் இரவு நேரங்களில் சாலைகளில் உலவுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதனால், தேயிலை எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என நிா்வாகத்தினா் வலியுறுத்தி வருகின்றனா். இந்நிலையில், காட்டெருமைகள் சாலைகளில் உலவுவதும் அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

அவ்வாறு உலவும் காட்டெருமைகளை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க முயற்சிப்பதும் தொடா்கிறது.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து அக்காமலை பகுதிக்கு வியாழக்கிழமை இரவு சென்ற அரசுப் பேருந்தை காட்டெருமை ஒன்று வழிமறித்து நின்றது. இதையடுத்து, பேருந்தில் இருந்தவா்கள் சப்தம் எழுப்பி காட்டெருமையை வனத்துக்குள் விரட்டினா்.

அக்காமலை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். காட்டெருமைகளைக் கண்டால் புகைப்படம் எடுக்கவோ, அவற்றின் அருகில் செல்லவோ முயற்சிக்க கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.