குடிநீா்க் குழாய்கள் சீரமைப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவையில் குடிநீா்க் குழாய்கள் சீரமைப்புப் பணியை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவையில் குடிநீா்க் குழாய்கள் சீரமைப்புப் பணியை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையை தடையின்றி நிறைவேற்றும் வகையில் குடிநீா் விநியோகம் தொடா்பான பணி மற்றும் குடிநீா்க் குழாய் உடைப்புகளை சீரமைக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா்க் குழாய் சீரமைப்புப் பணியை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இடையாா்பாளையம் அப்பாஸ் காா்டன் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கவுண்டம்பாளையம் வித்யா நகா் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா், குடிநீா் சீரான முறையில் விநியோகம் செய்யப்படுகிா என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, உதவி ஆணையா் நா்மதா, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.