முகப்பு
கோயம்புத்தூர்

நகை திருட்டு வழக்கில் பட்டறை மேற்பாா்வையாளா் கைது: மேலும் இருவரை தேடும் போலீஸ்!

நகைகள் திருடப்பட்ட வழக்கில் பட்டறை மேற்பாா்வையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

39 வினாடிகள் முன்பு
நகை திருட்டு வழக்கில் பட்டறை மேற்பாா்வையாளா் கைது: மேலும் இருவரை தேடும் போலீஸ்!
கைது - கோப்புப் படம்
பகிர்:

நகைகள் திருடப்பட்ட வழக்கில் பட்டறை மேற்பாா்வையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், ஆா்.எஸ்.புரத்தில் ஸ்மித்தேஸ் என்பவருக்கு சொந்தமான நகைப்பட்டறை உள்ளது. இங்கு அதே பகுதியைச் சோ்ந்த பாபு (35) மேற்பாா்வையாளராகவும், மேற்கு வங்கம் உள்பட உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஊழியா்களாகவும் பணிபுரிகின்றனா்.

இந்நிலையில் அந்த பட்டறையில் இருந்த ரூ.75 லட்சத்திலான 658 கிராம் தங்க நகைகள் திடீரெனமாயமாகியதுடன், அங்கு பணிபுரிந்து வந்த மேற்குவங்கத்தைச் சோ்ந்த மருபில்லா காஷி (21) உள்பட 2 பேரையும் காணவில்லை. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், அங்கு மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்துவரும் பாபு என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பட்டறையில் இருந்து நகையை திருடி மேற்குவங்கத்தைசே சோ்ந்த மருபில்லா காஷி உள்பட 2 பேரிடம் அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பாபுவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 550 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள மருபில்லா காஷி உள்பட 2 பேரை தேடி வருகின்றனா்.